சாதனையாளர்களின் சங்கமம்

Wednesday, 6 February 2019

சிபிஐ அதிகார எல்லை பற்றி கட்டுரை வரைக:

சிபிஐ அதிகார எல்லை பற்றி கட்டுரை வரைக:

முன்னுரை:
·           காவல் துறை என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது
·           குற்றங்களைக் கண்டறிதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் போன்ற பணிகளை செய்கிறது

CBI :
  •  சிபிஐ என்பது காவல் துறையின் அதிகாரங்களைக் கொண்ட தேசிய அளவிலான அமைப்பு.
  • டெல்லி சிறப்பு காவல் துறை நிறுவகச் சட்டத்திலிருந்தே சிபிஐ தமக்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.
  • உள்துறை அமைச்சகம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஏப்ரல் 1963ல் சிபிஐ தொடங்கப்பட்டது.
  • அதன் முதன்மை அதிகார எல்லை டெல்லி மற்றும் யூனியன் பிரதேசங்களோடு முடிந்துவிடுகிறது.
CBI வரையரை:
  • காவல் துறையின் பணிகளுக்கு வெளியே சிபிஐ இயங்குவதற்கு, அதுவும் மாநிலங்களின் ஒப்புதலோடு இயங்குவதற்கு மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது.
  • சிபிஐ அமைப்பின் அதிகாரங்களையும் அதிகார எல்லையையும் எந்தவொரு மாநிலத்துக்கும் அந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நீட்டிக்க முடியாது
மாநில அரசுகள் ஒப்புதலை திரும்பபெற காரணம்:
  • ·         மத்திய-மாநில அரசுகளின் நல்லுறவு மோசமடைவது
  • ·         எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ தவறாக உபயோகப்படுதுவது

· மாநில எல்லைக்குள் சிபிஐ இயங்குவதற்கான பொதுவான ஒப்புதலைத் திரும்பப்பெற்றுக்கொண்ட மாநிலங்கள்
o    ஆந்திரப் பிரதேசமும்
o    மேற்கு வங்கம்
· பொதுவான ஒப்புதலைத் திரும்பப் பெறுவது, அந்த மாநிலத்தில் சிபிஐ புதிய வழக்குகளைத் தொடங்குவதைக் கட்டுப்படுத்தும்

காஸி எல் ஹென்ட்டப் தோர்ஜி (1994) வழக்கு:
  • இவ்வழக்கின் தீர்ப்பின்படி, ஒப்புதலை திரும்பப் பெறுவது வருங்காலத்தில் உருவாகும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்;
  • ஏற்கெனவே நடைபெற்றுவரும் வழக்குகள் அவற்றுக்கான தீர்ப்பை எட்டுவதற்கு அனுமதிக்கப்படும்..
முடிவுரை
உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஒரு குறிப்பிட்ட வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால் மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் அதைத் தெளிவுபடுத்தியுள்ளது

No comments:

Post a Comment