சாதனையாளர்களின் சங்கமம்

Saturday, 26 January 2019

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித்திட்டம்:


சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித்திட்டம்:

தொடக்கம் - 2018 நவம்பர் 02 ல் பிரதமர் மோடி துவக்கம்
-                       சிறு, குறு, மற்றும் நடுத்தர துறையில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும்
-                       .இது ஒரு உதவித்திட்டம்
-                       5 அம்சங்கள் அலலது 12 முக்கிய நடவடிக்கைகளை கொண்டது.

அம்சங்கள்:
-                       எளிதாக கடன் பெறுதல், எளிதாக சந்தையை அணுகுதல்
-                       தொழில்நுட்ப மேம்பாடு, எளிதாக தொழில்புரிதல்
-                       பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு

நடவடிக்கைகள்:
-                       சிறு, குறு மற்றும் நடுத்தர நறுவனங்களுக்கு சான்றிதழிகள் மற்றும் கோப்புகள் சரியாக இருப்பின் 59 நிமிடத்தில் ஒரு கோடி வரையிலான கடன்
-                       GST  யில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு 2 சதவீதம் வட்டி சலுகை (தகுதியுள்ள நிறுவனங்களுக்கு 3 – 5 சதவீதம் வரி திருப்பி அளிக்கப்படும்)
-                       பொதுத்துறை நிறுவனங்களின் 25 சதவீதம் கொள்முதல்களில் 3 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக இருத்;தல்.
-                       அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் அரசின் மின் சந்தையில் கட்டாயமாக பங்கேற்றல்
-                       நாடு முழுவதும் 20 தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்துதல், மற்றும் 100 கருவியறைகள் ஏற்படுத்துதல்.
-                       மருந்துத்துறை சார்ந்த MSME க்களை ஏற்படுத்த மத்திய அரசு 70 சதவீதம் நிதியுதவி செய்தல்
-                       தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் 10 மத்திய விதிமுறைகள் குறித்த அறிக்கையை வருத்திற்கு 1 முறை  சமர்பித்தல்
-                       கணினியின்  Random method மூலம் MSME க்களை ஆய்வு செய்தல்
-                       காற்று மற்றும் நீர் மாசு குறித்த சட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுதல்
-                       தொழில் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்பொழுது எளிதான முறையில் சரிசெய்தல்
-                       ரூ 500 கோடிக்கும் மேலான விற்று முதல் கொண்ட MSME  க்கள் TREDS மூலம் மட்டும் பணிப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் முறைசார்ந்த கடன் கிடைப்பது.

No comments:

Post a Comment