சாதனையாளர்களின் சங்கமம்

Wednesday, 30 January 2019

இ-சிகரெட் என்றால் என்ன? இ-சிகரெட் தடை ஏன்?

Tamil Nadu Government bans manufacture and sale of e-cigarettes

 September 13th, 2018

Tamil Nadu Government has issued order banning manufacture, sale and possession of Electronic Nicotine Delivery Systems (ENDS) or e-Cigarettes with immediate effect in the state. The ban covers distribution, trade, display, marketing, advertisement, use, import and possession of e-cigarettes as well.

So far, Punjab, Karnataka, Kerala, Mizoram, Jammu and Kashmir, Uttar Pradesh and Bihar already have prohibited manufacture, import, sale and distribution of ENDs or e-cigarettes.

The Tamil Nadu government has already banned chewable tobacco products.

ENDS
ENDS are devices that heat solution to create aerosol, which also frequently contains flavours, usually dissolved into propylene glycolor and glycerin.

Electronic cigarettes (e-cigarettes) are most common prototype of ENDS.

These devices do not burn or use toacco leaves but instead vaporise solution, which user then inhales (This process is called as vaping).

The main constituents of vaporise solution are nicotine, propylene glycol (with or without glycerol and flavouring agents).

Health risk associated with ENDS

  1. Children, adolescents, pregnant women and women of reproductive age are at greater health risk due to use of ENDS including e-cigarettes. 
  2. ENDS solutions and emissions contain harmful chemicals and toxicants. They contain nicotine, addictive component of tobacco products. 
  3. In addition they also contain harmful metals, including lead, chromium and nickel and chemicals like formaldehyde with concentrations equal to or greater than traditional cigarettes. 
  4. Use of ENDS may affect development of foetus during pregnancy. 
  5. It may contribute to cardiovascular disease to people who use ENDS. 
  6. Moreover, nicotine may function as ‘tumour promoter’ and seems to be involved in biology of malignant diseases. 
  7. Foetal and adolescent nicotine exposure have long-term consequences for brain development, potentially leading to learning and anxiety disorders.


இ-சிகரெட் என்றால் என்ன? இ-சிகரெட் தடை ஏன்? 
What is E-Cigarette? Why it is banned in India?

இந்தியாவில் தற்போது இ சிகரெட் க்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்திலும் தடை விதிக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன . இதற்கு முக்கிய காரணம் இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் புற்றுநோயை உருவாக்கிடும் அபாயம் இருப்பதனால் இ சிகரெட் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

#இ-சிகரெட் என்றால் என்ன?

இ சிகரெட் என்பது ஆங்கிலத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் (Electronic Cigarette) என பொருள்படும் . தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய சிகரெட் , பீடி போன்றவற்றிற்குள்  புகையிலை அடைக்கப்பட்டு இருக்கும் . அதனை நெருப்பினால் பற்றவைத்து புகை பிடிப்பார்கள் .

இ சிகரெட் என்பது எலக்ட்ரானிக் கருவி . அதற்குள் நிகோடின் , கிளிசரின் மற்றும் சில கெமிக்கல் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும் . அந்த கருவிக்குள் இருக்கும் பேட்டரியை செயல்பட வைத்தவுடன், ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியினால், நிரப்பப்பட்டிருக்கும் திரவியம் ஆவியாகி அதனை பயன்படுத்துபவருக்கு புகைபிடிக்கும் போது ஏற்படக்கூடிய உணர்வினை கொடுக்கும் .

#இ-சிகரெட் தடை எதற்காக ?

இ சிகரெட் கொண்டுவாரப்பட்டபோது இதனால் ஏற்படும் நன்மைகளாக இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டன .

1 . புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுபட செய்ய இ சிகரெட் பயன்படும் 

2 . சாதாரண சிகரெட்டில் இருக்கக்கூடிய புகையிலை மற்றும் பல பொருள்களானது மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை தரக்கூடியது . இந்த அபாயங்கள் இ சிகரெட்டில் இல்லை .

இ சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்த நிறுவனங்கள் சொன்ன நன்மைகள் தான் இவை .

இந்தியாவை பொறுத்தவரை பல லட்சகணக்கான மக்கள் ஆண்டுதோரும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் நோய்களினால் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் . இதனை போன்றே நாடு முழுவதிலும் பல மக்கள் புகையிலை பொருள்களினால் பாதிப்படைந்து வருகிறார்கள். 

இவற்றினை தடுக்கப்போகிற வரப்பிரசாதமாகவே இ சிகரெட் வரவினை அனைவரும் பார்த்தனர் .
ஆனால் நெடிய ஆய்வுகளின் முடிவு முற்றிலும் எதிரானதாகவே கிடைத்திருக்கின்றது . 

அதன்படி …

இ சிகரெட் பயன்படுத்தினால் புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் என்பதற்கு எதிராக, இ சிகரெட் பயன்படுத்துவோர் பலரை சிகரெட் பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது .

இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்களினால் மேலதிகமாக புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள் .

இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்கள் புகையிலை செடியின் இலைகளில் இருந்தே எடுக்கப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது .

ஆக இ சிகரெட் அனுமதிக்கப்பட்ட இரண்டு முக்கிய காரணிகளையும் நிறைவேற்ற தவறியதால் உலகநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டுள்ளது . தற்போது தமிழகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது .

YOUTH is for TRUTH and HEALTH

with YOUTH u will WIN
9750055322
erode / radian / tnpsc /upsc




4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. It is a good initiative to prevent cigrates use..it will reduce cancer, heart diseases complaints..

    ReplyDelete
  3. TNPSC முதன்மை தேர்விற்கு பயன்படும் வகையில் தொகுத்து அளித்தற்கு நன்றி.இதே போல் முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை தினம்தோறும் அளியுங்கள்.

    ReplyDelete